மனித உடல் - இறைவனின் அற்புதம்!
இவ்வுலகில் எண்ணற்ற படைப்புகளை கடவுள் படைத்திருந்தாலும் அவற்றில் மனிதனை ஓர் உன்னதமான, உயர்ந்த, சிறந்த படைப்பாக கடவுள் படைத்துள்ளான்.
மனிதனைச் சிறந்த படைப்பென்று கடவுள் கூறியிருப்பதற்கு எண்ணற்ற காரணங்கள் இல்லாமலில்லை. மனித உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் அற்புதத்தை எடுத்து பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் ஒருசிலவற்றை இங்குக் காண்போம்.
கண்கள்:
கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பு ஆகும். மனிதனுக்கு கடவுள் இரண்டு கண்களைக் கொடுத்திருக்கிறான். உலகத்தை, வானத்தை, கடலை, ஆறுகளை, மலைகளை என எண்ணிலடங்கா கடவுள் படைப்புகள் அனைத்தையும் இந்த இரண்டு கண்கொண்டு பார்த்து மனிதன் உணர்கிறான். கண்ணின் அருமை குறித்து இரண்டு கண்ணும் இல்லாத ஒரு மனிதரிடம் கேட்டால்தான் தெரியும். உடலிலுள்ள எந்த உறுப்பை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கக்கூடிய மனிதன், தன் கண்ணிற்குப் பகரமாக பல கோடிகள் கொடுத்தாலும் கொடுக்க முன்வர மாட்டான் என்பது தெள்ளத்தெளிவான உண்மை.
காது:
கண்ணால் கண்டு காட்சிகளை எப்படி அறிந்துக் கொள்ளுகின்றோமோ அதேபோன்று காதுகளையும் அற்புதமாகவே கடவுள் படைத்துள்ளான். மனிதர்கள் பேசக்கூடிய பேச்சுகள் தொடங்கி, குயில்கள் கூவுகின்ற இனியமான ஓசை வரை எத்தனையோ விதமான சப்தங்களை அறிந்து வைத்துக் கொண்டு, எத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் இது இன்னாரின் குரல் அல்லது இது இந்தப் பறவையின் அல்லது விலங்கின் குரல்கள் என்று மனிதன் பிரித்தறிகின்றான் என்றால் அது கடவுள் வழங்கியுள்ள இரண்டு காதுகளின் அற்புதமல்லவா?
நாக்கு:
நாவானது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவைப் பற்கள் மெல்லுவதற்கு வசதியாக நகர்த்தியும் புரட்டியும் திருப்பியும் தரும் உறுப்பு. மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளுவதும் நாக்கே. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும். நாக்கின் மேற்புறத்தில் சுவையுணர் நுண்புடைப்புகள் பல உள்ளன. வாயில் ஊறும் உமிழ் நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக உடலில் உள்ள தசைகளில் நாக்கு வலிமையான தசைகளில் ஒன்று. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே வெவ்வேறு வகையான ஒலிகள் எழுப்பி மொழி பேசுவதற்கும் நாக்கு மிகவும் துணை செய்கின்றது. இவ்வுலகில் தோன்றிய, பேசப் படுகின்ற அத்தனை மொழிகளும் நாவினால்தான் பேசப் படுகின்றன.
உடம்பிலேயே தொடு உணர்ச்சி மிக்க உறுப்பு நாக்கின் நுனி ஆகும். நாக்கின் மேற்புறத்தில் உள்ள நுண்புடைப்புகளில் நான்கு வகையான நுண்புடைப்புகள் உள்ளன. சுவையுணர் நுண்புடைப்புகளுக்கு நாமுடிப்பு என்று பெயர். நாமுடிப்புகளின் அமைப்பைப் பொருத்து அவை இனிப்பு, புளிப்பு, கசப்பு, கரிப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்து வகையான சுவைகளைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் உணரக்கூடிய விதத்தில் கடவுள் படைத்துள்ளானே இது கடவுளின்அற்புதப் படைப்பல்லவா?
அண்மைக்காலம் வரையிலும் நாவின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு சுவைகளை உணர்வதாகப் பாடநூல்களில் இருந்து பொதுஅறிவுக் கட்டுரைகள் வரை தவறாகவே எழுதப்பட்டு வந்தது. தனித்தனிச் சுவைகளை உணர நாவினில் தனியான இடங்கள் ஏதும் இல்லை.
நாக்கானது தன் இனிய பேச்சினால் சொர்க்கத்திற்கு கொண்டு செல்லவும், தன் தவறான மற்றும் பாவமான பேச்சினால் நரகத்திற்கும் இட்டு செல்லும்!
பல்:
அடுத்ததாகப் பற்கள். நாம் உண்ணக்கூடிய உணவினைப் பற்களின் மூலம் அசைபோட்டு நம் குடலுக்குச் செலுத்துவதில் பற்கள் தலையாய பணியைச் செய்கின்றது. மனிதர்களுக்கு இருதடவைகள் பற்கள் முளைக்கின்றன. குழந்தைகளுக்குப் பற்கள் ஆறு மாத வயதில் முளைக்கத் தொடங்குகின்றன.
வாய்:
பொதுவாக வாயின் பயன்பாடு உணவு, நீர் இவைகளை உட்கொள்ளுதலாகும்.
முகம்:
முகம் தலையின் முன்பகுதி ஆகும். மனிதரில் நெற்றி முதல் நாடி வரையான பகுதிகள் இதிலடங்கும். நெற்றி, கண்ணிமை, கண்கள், மூக்கு, கன்னம், வாய், நாடி ஆகிய பகுதிகள் மனித முகத்திற் காணப்படுகின்றன. மனிதரை அடையாளங் காண முகங்களே பொதுவாகப் பயன்படுகின்றன. இருவரின் முகங்கள் முழுஒத்தத் தோற்றம் கொண்டிருப்பதில்லை. ஆதலால் அடையாள அட்டைகளில் முகத்தின் புகைப் படங்களே பயன்படுத்தப்படுகின்றன. உலகத்தில் தற்பொழுது வாழக்கூடியவர்களில் எத்தனையோ கோடி மனிதர்களின் முகமும், இதற்கு முன்னர் வாழ்ந்து மறைந்தவர்
No comments:
Post a Comment