Wednesday, 11 September 2013

மனோஜ் நடிக்கும் 13!!

மனோஜ் நடிக்கும் 13!!

இயக்குநர் பாரதிராஜாவின் வாரிசு மனோஜ். தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கடல் பூக்கள், சமுத்திரம், அல்லி அர்ஜூனா போன்ற படங்களில் நடித்தார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் வெளிவந்த அன்னக்கொடி படத்தில் வில்லனாக நடித்தார். இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு “13” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மனோஜ் உடன் 6வயது சிறுமிகள் இருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவியாளராக இருந்த சுரேஷ் என்பவர் இயக்குகிறார். ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்டுடியோஸ் சார்ப்பில் செந்தில் தயாரிக்கிறார். தற்போது படத்திற்கான குழந்தைகள் தேர்வு மற்றும் இதர கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

No comments:

Post a Comment