தயாரிப்பாளரான இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா: ‘2012 மிஸ் இந்தியா’வை அறிமுகப்படுத்துகிறார்
கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘சத்யா’, ‘இந்திரன் சந்திரன்’, ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’, தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூன், மலையாளத்தில் மோகன்லால்,இந்தியில் சல்மான்கான் உள்ளிட்ட சூப்பர் மற்றும் மெகா ஸ்டார்களை வைத்து கடந்த 27 வருடங்களில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
இவர் தற்போது சுரேஷ் கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் புதிய படக்கம்பெனியை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றை தயாரித்து, இயக்கவிருக்கிறார். இப்படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படத்தில் நாயகனாக பிரின்ஸ் மற்றும் நாயகியாக ‘2012 மிஸ் இந்தியா’ வானியா மிஷ்ரா ஆகியோர் அறிமுகமாகின்றனர்.
காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்க உள்ளனர்.
No comments:
Post a Comment