Wednesday, 11 September 2013

அரசியலுக்கு வரப்போகிறேன் என நான் சொன்னதில்லை - விஜய்

அரசியலுக்கு வரப்போகிறேன் என நான் சொன்னதில்லை - விஜய்

அரசியல் எனக்கு பிடிக்கும் ஆனால் அரசியலுக்கு நான் வரப்போகிறேன் என எங்கேயும் எப்போதும் கூறியதில்லை என நடிகர் விஜய் கூறியுள்ளார். சமீபத்தில் தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்னை, விஜய்யை ரொம்பவே அப்சட் ஆக்கியது. இருந்தும் அப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு அதிலிருந்து கொஞ்சம் விடுபட்டுள்ளார். இந்நிலையில் தனியார் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய், அமலாபால் உள்ளிட்ட தலைவா படக்குழுவினர் பேட்டியளித்தனர். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் பலர் விஜய்யிடம் பல கேள்விகளை கேட்டனர். ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகவும், மிக நிதானமாகவும் பதிலளித்தார் விஜய்.

அப்போது தலைவா படம் நீங்கள் விரைவில் அரசியலுக்கு வருவதை சொல்லாமல் சொல்கிறதா என்று ஒரு கேள்வி கேட்க, விஜய் அதற்கு இப்படி பதிலளித்துள்ளார். அதாவது, தலைவா படத்தில் நாங்கள் அப்படி சொல்லவில்லை, நீங்களாகத்தான் அப்படி சொல்கிறீர்கள். எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என எங்கும் எப்போதும் சொன்னது கிடையாது. நான் அரசியல்வாதியும் கிடையாது, எந்த கட்சியை சார்ந்தவனும் கிடையாது. நான் ஒரு நடிகன். என் கவனம் எல்லாம் இப்போதைக்கு சினிமாவில் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment