சுவாமி
விவேகானந்தர் பொன்மொழிகள்
வெற்றி வாழ்வின் ரகசியம்!
உன்னை உடம்பாக நினைக்கும் போது உலகிலிருந்து நீ வேறுபடுகிறாய்; உன்னை உயிராக நினைக்கும்போது நிலையான பேரொளிப் பிழம்பின் பொறி ஆகிறாய்; நீ ஆன்மா என்று எண்ணும்போது அனைத்தும் ஆகிறாய். -சுவாமி
விவேகானந்தர்
இறைவன்
இறைவனுக்கு அருவமும் உண்மை, அதுபோல் உருவமும் உண்மை; இதை நினைவில் வைத்திரு. ஆனால் உனக்கு எதில் நம்பிக்கையோ அதைப் பிடித்துக் கொள் -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர
பாடுபடு
இந்த மானிடப் பிறவியைப் பெறுவது பெரிய பாக்கியம்! சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபடு. பாடுபட வேண்டும்; பாடுபடாமல் ஏதாவது நடக்குமா? பல்வேறு வேலைகளுக்கிடையிலும் கொஞ்ச நேரம் அதற்காக ஒதுக்க வேண்டும் -அன்னை ஸ்ரீசாரதாதேவி
பந்தத்தின் காரணம்
பந்தத்திற்கு காரணம் காமம் மற்றும் பணத்தாசைதான், காமமும் பணத்தாசையுமே உலகியல். இவை இரண்டுமே நாம் இறைவனைக் காண்பதற்கு தடையாக உள்ளன. -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
எங்கும் எப்போதும் இறைநாமம் சொல்!
இறைவனின் திருநாமத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதற்கும் அவரை வழிபடுவதற்கும் குறிப்பிட்ட இடமோ, காலமோ, அவசியமில்லை. எந்தச் சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் இறைவனின் திருநாமத்தைக் கூறலாம். -சுவாமி சாரதானந்தர்
ஆனந்தங்கள
விஷயானந்தம், பஜனானந்தம், பிரம்மானந்தம் என்று ஆனந்தம் மூன்றுவகை. எல்லோரும் ஈடுபடுகின்ற காமம் மற்றும் பணத்தாசை ஆனந்தம்தான் விஷயானந்தம் இறைவனுடைய திருநாமத்தையும் மகிமையையும் பாடுவதனால் வருவது பஜனானந்தம். இறைக்காட்சியால் ஏற்படுவது பிரம்மானந்தம் -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
தவம் என்பது என்ன?
இறைவனிடம் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் அடைய வேண்டுமென்றால் நீ கடும் தவம் செய்ய வேண்டும். தவம் என்பது குறிக்கோளின்றி அங்குமிங்கும் அலைவதல்ல; நிலைதடுமாறாது. நாள் தவறாது செய்யப்படும் ஜபம், தியானம் மற்றும் புலனடக்கம் ஆகியவையே தவமாகும் -சுவாமி அபேதானந்தர்
இதயத்து உணர்வ
இறைவன் இதயத்து உணர்வையே ஏற்றுக் கொள்கிறார். ஒருவன் எதைக் கருத்திற் கொண்டு சாதனை செய்கிறானோ, அதுவே அவனுக்கு அமைகிறது. இதயத்து உணர்வு எவ்வாறோ, அவ்வாறே பயனும் கிடைக்கும். -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
உன் ஆன்மாவே உன் ஆசிரியர்
நீயே உன்னுள்ளிருப்பதை வெளிவரச் செய்ய வேண்டும். ஒருவராலும் உனக்குக் கற்பிக்க முடியாது. யாராலும் உன்னை ஆன்மீகவாதியாக்க முடியாது. உன் ஆன்மாவைத் தவிர வேறெந்த ஆசிரியரும் இல்லை -சுவாமி விவேகானந்தர்
ஆன்மாவே நாம்!
மரணமற்ற, சுதந்திரமான, இயல்பாகவே தூய்மையான ஆன்மாவே நாம். நாம் பாவம் செய்யமுடியுமா? முடியவே முடியாது. இத்தகைய நம்பிக்கைதான் வேண்டும். இத்தகைய நம்பிக்கையே நம்மை மனிதனாக்கும்; நம்மைத் தெய்வமாக்கும். -சுவாமி விவேகானந்தர்
No comments:
Post a Comment