இந்தியாவில் சச்சினின் 200-வது டெஸ்ட்
மும்பை:வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வரும் நவம்பரில் இந்தியா வர சம்மதித்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தனது 200-வது டெஸ்ட் போட்டியினை சொந்த மண்ணில் விளையாட உள்ளார். தற்போது 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், இந்திய மண்ணில் விளையாடுவதன் மூலம், உலகில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனை படைக்க உள்ளார். அநேகமாக சொந்த மைதானமான மும்பையில் விளையாடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment