ஆறிப்போகும் பிரியாணி!
தலயை வைத்து மங்காத்தா ஆட்டமாடிய அந்த இயக்குனர் அடுத்து பருத்திவீரனைக்கொண்டு இயக்கியுள்ள படம் பிரியாணி. இப்படம் தொடங்கப்பட்டதில் இருந்தே ஏதாவது ஒரு காண்ட்ரவர்சியான தகவல்கள் லீக்காகிக்கொண்டேயிருந்தன. குறிப்பாக, படத்தை மெதுவாக நகர்த்துவதாக இயக்குனர் மீது புகார் சொன்னவர்கள், பின்னர் கடைசிகட்டத்தில் க்ளைமாக்ஸ் மீது நம்பிக்கையில்லாமல் படப்பிடிப்பையே நிறுத்தி வைத்திருந்தனர்.
அதனால், அதன்பிறகு கமிட்டான அழகுராஜா படத்தில் நடித்தார் மேற்படி ஹீரோ. அதையடுத்து, இயக்குனர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பிறகு மறுபடியும் பிரியாணியை கிண்டத் தொடங்கினார்கள். அதிலும் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு பரிமாறி விட வேண்டும் என்று இயக்குனரை விரட்டு விரட்டென்று விரட்டினார்கள். அவரும் அவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுத்து மொத்த வேலைகளையும் முடித்து ரிலீசுக்கு தயார்படுத்தி விட்டார்.
ஆனால் இப்போதோ, தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்திருந்ததை பொங்கலாக மாற்றிவிட்டனர். அதோடு, பிரியாணிக்குப்பிறகு மேற்படி ஹீரோ நடித்து வந்த அழகுராஜாவை அதற்கு முன்னதாகவே ரிலீஸ் பண்ணப்போகிறார்களாம்.
இதனால் டோட்டல் அப்செட்டாகியிருக்கிறாராம் இயக்குனர். இந்த நிலையில், படம் சரியாக வரவில்லையாம். அதனால் ரீ-ஷீட் பண்ணுகிறார்களாம் என்று சில கோலிவுட் விஷமிகள் கொளுத்திப்போட, இன்னும் மூன்று மாதம் இருக்கிறது. அதுவரைக்கும் என்னென்ன வதந்திகளை பரப்புவார்களோ தெரியவில்லையே என்று நொந்துபோயிருக்கிறாராம் மங்காத்தா மன்னன்.
No comments:
Post a Comment