Saturday, 7 September 2013

நட்பு கால்பந்து: பிரேசில் அணி வெற்றி

நட்பு கால்பந்து: பிரேசில் அணி வெற்றி

பிரேசில்லா:ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.

பிரேசில் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்றது. இதன் முதல் பாதியில் பிரேசில் அணியின் ஜோ இரண்டு கோல் (8, 33வது நிமிடம்) அடித்து அசத்தினார். தன் பங்கிற்கு பிரேசில் அணியின் இளம் வீரர் நெய்மர் (35வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு ஆஸ்திரேலிய அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்த பிரேசில் அணிக்கு ரமிரெஸ் (58), படோ (72), லூயிஸ் (83) ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க, எதிரணியினர் திணறினர். முடிவில், பிரேசில் அணி 6-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment