Thursday, 5 September 2013

பி.எஸ்.என்.எல்., டேட்டா கார்டு புதிய கட்டணம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல்., டேட்டா கார்டு புதிய கட்டணம் அறிமுகம்

சென்னை: "டேட்டா கார்டு' சேவையை வழங்கும், "2ஜி', "3ஜி' கட்டணங்களை, பி.எஸ்.என்.எல்., திருத்தி அமைத்துள்ளது. புதிய கட்டணம், இம்மாதம், 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள அறிக்கை: பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு முறையில் வழங்கப்படும், 2ஜி, 3ஜி டேட்டா சேவைகளுக்கு, இதுவரை அமலில் இருந்த கட்டணம், ஆக., 15ம் தேதி முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய கட்டண விகிதம் அறிமுகம் செய்யப்படுகிறது. இம்மாதம் முதல் அமலுக்கு வரும், பிரீபெய்டு கட்டணங்கள், 139, 253, 561, 1,011 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முப்பது நாட்களுக்குள் கலாவதியாகும் இக்கட்டணங்களில், முறையே, 1, 2, 5, 10 ஜி.பி.,க்கு இலவசம் உண்டு. மேலும், 14, 35, 78, 96 ரூபாய் மதிப்புகளில், பிரீபெய்டு திட்டங்கள் உள்ளன. போஸ்ட்பெய்டு திட்டத்தில், 125, 225, 501, 901 ரூபாய்க்கு மாதாந்திர திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டங்களில், இலவச பயன்பாடு போக, கூடுதலாக பயன்படுத்தும் போது, 10 கே.பி.,க்கு, 1 பைசா என, கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment