Saturday, 7 September 2013

கோப்பை வெல்வாரா செரினா: அசரன்காவுடன் மீண்டும் மோதல்

கோப்பை வெல்வாரா செரினா: அசரன்காவுடன் மீண்டும் மோதல்

நியூயார்க்:யு.எஸ்., ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பைனலில் இன்று செரினா வில்லியம்ஸ், அசரன்கா மோதுகின்றனர். இதில், "நடப்பு சாம்பியனாக களமிறங்கும் செரினா மீண்டும் கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

நியூயார்க்கில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் "நம்பர்-2 வீராங்கனையான பெலாரசின் அசரன்கா, இத்தாலியின் பிளாவியா பெனிட்டாவை 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். இதன் மூலம், இத்தொடரின் பைனலுக்கு தொடர்ந்து 2வது முறையாக முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் உலகின் "நம்பர்-1 வீராங்கனையான அமெரிக்காவின் செரினா, தரவரிசையில் 5வது இடத்திலுள்ள சீனாவின் லி நாவை 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, மீண்டும் பைனலுக்குள் நுழைந்தார்.

யாருக்கு வாய்ப்பு:இன்று இரவு நடக்கும் பைனலில் செரினா,31, அசரன்கா, 24, பலப்பரீட்சை நடத்துகின்றனர். கடந்த முறை இவர்களே மோதினர். அப்போது செரினா பட்டம் வென்றார். டென்னிஸ் அரங்கில் இருவரும் 15 முறை சந்தித்துள்ளனர். இதில், செரினா 12 முறை வென்று ஆதிக்கம் செலுத்துகிறார். தனது 5வது யு.எஸ்., ஓபன் கோப்பையை எதிர்நோக்கி களமிறங்கும் செரினா மீண்டும் சாதிக்க வாய்ப்பு உள்ளது.

அசரன்காவை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த சின்சினாட்டி ஓபன் பைனலில் செரினாவை வென்றுள்ளார். இதே நம்பிக்கையில் களமிறங்கினால், கடந்த முறை சந்தித்த தோல்விக்கு பழிதீர்க்கலாம்.

வில்லியம்ஸ்ஜோடி தோல்வி:முன்னதாக நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா, வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள், செக்குடியரசின் ஆண்ட்ரியா, லூசியா ஜோடியிடம் 4-6, 2-6 என வீழ்ந்தது.

ஆண்ட்ரியா ஜோடி சாம்பியன்:கலப்பு இரட்டையர் பைனலில் செக் குடியரசின் ஆண்ட்ரியா, பெலாரசின் மேக்ஸ் மிரின்யி ஜோடி, அமெரிக்காவின் அபிகய்ல், மெக்சிகோவின் சாண்டியாகோ ஜோடியை 7-6, 6-3 என வீழ்த்தி, கோப்பை வென்றது.

No comments:

Post a Comment