தங்கம் வென்றார் போல்ட்
பிரஸ்செல்ஸ்:டையமண்ட் லீக் தடகளத்தில் அசத்திய உசைன் போல்ட் தங்கம் வென்றார்.
உலகின் "மின்னல் வேக வீரர் ஜமைக்காவின் உசைன் போல்ட், 27. இவர் 100 மீ., (9.58 வினாடி), 200 மீ., (19.19 வினாடி) ஓட்டத்தில் உலக சாதனை படைத்தவர்.
அடுத்தடுத்த ஒலிம்பிக் (2008 பீஜிங், 2012 லண்டன்) போட்டியில் 100, 200 மற்றும் 4*100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். தவிர, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை 8 தங்கம், 2 வெள்ளி (2007-213) கைப்பற்றியுள்ளார்.
இந்த ஆண்டில் தனது கடைசி தடகள போட்டியில் பங்கேற்றார். பெல்ஜியத்தின் பிரஸ்செஸ்சில் நடந்த இப்போட்டியின் 100 மீ., ஓட்டத்தில், 9.80 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
அமெரிக்காவின் மைக்கேல் ராட்ஜர்ஸ் (9.90 வினாடி) வெள்ளி வென்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற ஜமைக்காவின் நெஸ்டா கார்டர், மீண்டும் 3வது இடம் பெற்றார்.
பிரேசர் அபாரம்:பெண்கள் 100 மீ., ஓட்டத்தில் ஜமைக்க வீராங்கனை ஷெல்லி ஆன் பிரேசர், 10.72 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
No comments:
Post a Comment