இந்து
தொடர்பான கட்டுரை
இந்து சமயம்
தத்துவங்கள்
கடவுள்கள்
மெய்யியல்
நூல்கள்
திருவிழாக்கள்
தத்துவஞானிகள்
வேறு தலைப்புகள்
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல்
வைணவம் வலைவாசல்
பா • உ • தொ
இந்து (தேவநாகரி:हिंदू) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மெய்யியல், சமயங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளச் சொல்லாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி "இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது.(உதா: இந்து சமயம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் அல்லது சீக்கியம்[1]). பொதுவாக இந்து சமயத்தவரைக் குறிப்பிட இந்து என்ற சொல் பயன்படுகிறது.
சொல்வரலாறு
சுவசுத்திக்கா
செங்கிருதச் சொல்லான சிந்துவிலிருந்து இந்து மறுவியதாகும். முதன்முதலாக சிந்து என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப்பகுதி ஆறான சிந்து ஆற்றை குறிப்பிட ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[2][3]
பிரகாஸ்பதி ஆகமத்தில்
“
हिमालयं समारभ्य यावदिंदुसरोवरम् ।
तं देवनिर्मितं देशं हिंदुस्थानं प्रचक्ष्यते ।।
ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் .
தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே ..
பொருள்: கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்து என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது.[4][5]
”
மேற்கத்திய அரபு மொழியில் சிந்து நதிக்கு அப்பாலுள்ள மக்களைக் குறிக்க அல்-ஹிந் என்கிற சொல்பயன்படுத்தப்பட்டு பிரபலமானது.[6] மற்றும் ஈரான் நாட்டிலும் ஹந்து என்ற சொல்லே இந்தியர்களைக் குறிக்கப் பயன்பட்டது. 13ம் நூற்றாண்டின் போதுதான் ஹிந்துஸ்தான் என்பது இந்தியாவைக் குறிக்க பயன்படுத்த ஆரம்பிக்கப் பட்டது.[7] ஆரம்பத்தில் ஹிந்து என்கிற சொல் சமயத்தை பிரதானமாக குறிக்காமல் பகுதி மக்களையே குறித்துள்ளது. 16-18ம் நூற்றாண்டு வங்காள மொழி நூல்களிலும், காஷ்மீர், தென்னிந்திய நூல்களிலும் அப்படியே பயன்படுத்தப்பட்டு வந்தன.[8][9]பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சிக்காலத்தில் இந்திய சமயத்தை பின்பற்றுபவர்களை குறிக்க ஹிந்து என்கிற சொல் புழக்கத்தில் வந்தது. காலப்போக்கில் ஆபிராமிய சமயம் மற்றும் வேத கால இந்திய சமயமல்லாத(சமணம், சீக்கியம் அலல்து பௌத்தம்) நீங்கலாக சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களை மட்டும் குறிக்கப்பயன்படுகிறது.
இந்து சமயம்
இந்து சமய கொடி
இந்து சமய குறியீடுகள் (தாமரை, சுவஸ்திகா, ஓம், தீபம், திரிசூலம்)
Founder
இல்லை
Regions with significant populations
இந்தியா, இலங்கை, பெல்ஜியம், கனடா, ஹாங் காங், ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்க ஐக்கிய நாடு
Scriptures
வேதம் உபநிடதம் புராணம் இதிகாசம்
Languages
பிராகிருதம், சமசுகிருதம், கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தி
இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது [1][2]. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது.
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.
சொல்லிலக்கணம்
இந்து என்பது சமஸ்கிருத சொல்லாகும். பாரசீகத்தினர் சிந்து நதியின் கிழக்குப் பக்கம் வசிப்பவர்களை சிந்துக்கள் என்றும் அவர்களது இறையுணர்வு முறையை (மதத்தை) சிந்து மதம் என்றும் அழைக்கலாயினர். பிற்காலத்தில் சிந்து என்ற சொல்லானது திரிந்து இந்துவாக மாறியது. இந்த வார்த்தையானது முதன்முதலில் ரிக்வேதத்த்ல் பயன்படுத்தப்பட்டுள்ளது. யூதர்களின் எஸ்த்தர் என்ற வரலாற்று நூலில் இந்து தேசம் என்று குறிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு கடவுளுக்கு பயந்த சுபாவம் என்ற அர்த்தமுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிந்து நதியில்லை என்றால் இந்துமதம் இல்லை என பாரத பிரதமர் நேரு அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்து நாகரிகம்
இந்து நாகரிகம் என்பது இந்து மதத்தின் வரலாற்று ரீதியிலான பாரம்பரியத்தை அறிந்துகொள்ளும் துறையாகும். உலக நாகரிகங்களின் தோற்றத்தில் மொஹஞ்சதாரோ - ஹரப்ப நகரங்களில் நிலவிய சிந்துநதிக்கரை நாகரிகம் இந்து மதச் சாயல்களை அண்டியது என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஆயினும் அது தொடர்பில் விமர்சனங்களும் நிலவுகின்றன. இந்து மதத்தின் தோற்றம் பற்றித் தெளிவான குறிப்புகள் வரையறுக்கப் படாமையினால் சிந்துவெளி நாகரிகம், வேதங்கள் எனத்தொடங்கி வடஇந்திய வரலாறு, பண்டைத் தமிழகம் தொடங்கி தென்னிந்திய வரலாறு எனும் வகையில் இலக்கியங்களையும், கல்வெட்டுச் சாசனங்களையும், பிற வரலாற்றுக் குறிப்புகளையும் ஆதாரமாகக் கோண்டு இந்து நாகரிகப் பரப்பு நிறுவப்படுகின்றது.
ஈழநாட்டின் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் உயர்தரப் பிரிவில் இந்து நாகரிகம் தனிப் பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பன இந்துநாகரிகத்தை பயில்நெறியாக் போதிக்கின்றன. முது தத்துவமானி, கலாநிதிப் பட்டமும் இந்நெறி தொடர்பாக வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment