தமிழக சிறப்பம்சங்கள் (Tamilnadu Specials)
தமிழ் இனம் ஆதிமுதலாகவே வாழும் பகுதியான தமிழகத்தில் ஆறுகள், மலைகள் என பல்வேறு இயற்கை வளங்களையும், பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. அவற்றினைப் பார்ப்போம்.
தமிழகத்தில் காணப்படும் சிறப்பம்சங்கள் :
தமிழக ஆட்சி முறை (Administration)
தமிழக ஆறுகள் (Rivers)
தமிழக வனவளம் (Forests)
தமிழக அணைகள் (Dams)
தமிழக கோட்டைகள் (Forts)
தமிழக முதல்வர்கள் (Chief Ministers)
தமிழக ஆளுநர்கள் (Governers)
தமிழக சபாநாயகர்கள் (Speakers)
தமிழக மேலவைத் தலைவர்கள் (Legislative Council)
தமிழக சிறப்பம்சங்கள் - தமிழக ஆட்சி முறை (Tamilnadu Administration)
சட்டமன்றம்
மாநில சட்டமன்றம் என்பது கீழவையும் மேலவையும் கொண்டதாகும்.
மாநில சட்டமன்றம்-பேரவை
இச்சபை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. இச்சபையில் குறைந்தது 60 உறுப்பினர்களும் அதிகபட்சம் 500 உறுப்பினர்களும் இருப்பர். தமிழ்நாடு சட்டசபையில் ஜனவரி 11, 1995ம் ஆண்டு நிலவரப்படி நியமன உறுப்பினர்-1, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 234 ஆக 235 பேர் உள்ளனர். சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும். இந்தச் சபைக்கு 18 வயது நிரம்பிய குடிமக்கள் தங்களுடைய வாக்குரிமையால் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 25 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன் இச்சபையின் உறுப்பினராகப் போட்டியிடலாம். தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில். பல தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். சில தொகுதிகள் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநில சட்ட மன்றம் அதன் முதல் கூட்டத்திலிருந்து 5 ஆண்டுகள் செயல்படும் ஆனால் நிரந்தர அரசு அமைக்கப்படாத காலங்களில் அதற்கு முன்னரே அது கலைக்கப்படலாம். அவசர காலங்களில் தேவைப்படின் 5 ஆண்டுகளுக்கு மேல் மாநில சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்யலாம். இதன் உறுப்பினர்கள் பேரவையின் செயல்பாடுகளை நடத்த அவர்களுக்குள் சபாநாயகரையும், துணை சபாநாயகரையும் தேர்ந்தெடுப்பார்கள். சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் தலைமை தாங்கி நடத்துவார். அவர் ஏதாவது காரணத்தினால் அவ்வாறு செயல்பட முடியாதபோது துணை சபாநாயகர் தலைமை தாங்கி நடத்துவார்.
சட்டமன்றம்-மேலவை
இது மாநிலத்தில் உள்ள நிரந்தர சபை. இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடுவதில்லை, இவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்நதெடுக்கப்படுகின்றனர். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 1/3 பங்குக்கு மேர்படாமல் இருத்தல் வேண்டும். 1/3 பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்றங்களினாலும் 1/12 பங்கு உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள பல்கலைக் கழக பட்டதாரிகளாலும், 1/12 பங்கு உறுப்பினர்கள் ஆசிரியர்களாலும், 1/3 பங்கு உறுப்பினர்கள் மாநில கீழவை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.சமூக சேவை, கலை, விஞ்ஞானம் ஆகியவற்றில் சிறந்தவர்களில் இருந்து மேலும் 1/6 பங்கு உறுப்பினர்கள் மாநில ஆளுனரால் நியமிக்கப்படுவர். மேலவை உறுப்பினர் 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். இவர் மத்திய, மாநில அரசுகளில் எந்த அலுவல் புரிபவராகவும் இருத்தல் கூடாது. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். 1/3 பங்கு உறுப்பினர்கள் ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்கள். ஆகவே இது நிரந்தர சபையாகும், இதன் உறுப்பினர்கள் மேலவைத் தலைவரையும், துணைத்தலைவரையும் அவர்களுக்குள் தேர்ந்தெடுப்பார்கள். மேலவைத் தலைவர் சபையின் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குவார். தமிழ்நாட்டில் 1986ம் ஆண்டு சட்டமேலவை கலைக்கப்பட்டது.
முதலமைச்சர், அமைச்சரவை அமைப்பு
மைய அரசிலுள்ளது போன்று மாநிலத்தின் உண்மையான நிர்வாக அமைப்பு அமைச்சரவையாகும். முதலமைச்சரை ஆளுநர் நியமிப்பார், முதலமைச்சரின் ஆலோசனைப்படி ஏனைய அமைச்சர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். மக்களின் நல்வாழ்வுக்காக அமைச்சரவை பணிபுரிகிறது. முதலமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து நடத்துவார். நாட்டின் நிர்வாகம் பற்றியும் மக்களன் நல்வாழ்வுத் திட்டம் பற்றியும் விவாதிப்பார். சட்டப்பேரவையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை அமைச்சரவை நீடிக்கும். அரசின் நிதி மசோதாக்கள் சட்டப் பேரவையில் தான் நிறைவேற்றப்படுகின்றன. நாட்டு நலத் திட்டங்கள் சட்டபேரவையில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அங்கீகாரம் பெற்று சட்டமாகும்.
தலைமை செயலகம்
தலைமை செயலகம் நிர்வாகத் துறையின் உயர்நிலை அமைப்பாகும். இது மாவட்ட, வட்ட நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு தலைமை செயலாளரும், இவருக்குக் கீழ் ஒவ்வொரு துறைக்கும் ஒரு செயலாளரும் உள்ளனர். இவர்களுக்கு உதவிட இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர், துணைச் செயலாளர், சார்புச் செயலாளர், கண்காணிப்பாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களும் உள்ளனர்.
ஆளுநர்
தகுதிகள்
ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தலைவர் ஆளுநர் ஆவார். மத்திய அரசின் ஆலோசனைப்படி இவர் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவார். இவருடைய பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இவர் 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். இவர் இருக்குமிடம் ஆளுநர் மாளிகை எனப்படும். இது சென்னையில் உள்ளது
அதிகாரங்கள்
மாநிலத்திலுள்ள நிர்வாகம், சட்டமன்றத் துறை, நிதி மற்றும் நீதி சம்மந்தமான் அதிகாரங்கள் அனைத்திற்கும் ஆளுநரே தலைவராவார். மாநில அரசால் நிறைவேற்றப்படும் எல்லா நிர்வாக முடிவுகளும், நடவடிக்கைகளும் ஆளுநரின் இசைவினைப் பெற வேண்டும். மாநிலத்தின் தேர்வாணைக்குழு உறுப்பினர்கள், சார்பு நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் போன்றவர்களை நியமிப்பார். சட்டமன்றத்தைக் கூட்டவோ ஓத்திப் போடவோ தக்க காரணம் காட்டி மத்திய அரசின் ஆலோசனைப்படி கலைக்கவோ ஆளுநருக்கு அதிகாரமுண்டு. சட்டமன்றம் கூடாத சமயங்களில் அவசரச் சட்டம் பிறப்பிக்க அவருக்கு அதிகாரமுண்டு. ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு கட்டுப்பட்டவர்.
தமிழகத்தின் வழியாகப் பாய்ந்து வளம் கொழிக்கச் செய்யும் ஆறுகளின் விவரங்கள்.
மாவட்டங்கள்ஆறுகள்
கடலூர்தென்பெண்ணை,கெடிலம்
விழுப்புரம்கோமுகி
காஞ்சிபுரம்அடையாறு,செய்யாறு,பாலாறு
திருவண்ணாமலைதென்பெண்ணை,செய்யாறு
திருவள்ளூர்கூவம்,கொடுதலையாறு,ஆரணியாறு
கரூர்அமராவதி
திருச்சிகாவிரி,கொள்ளிடம்
பெரம்பலூர்கொள்ளிடம்
தஞ்சாவூர்வெட்டாறு,வெண்ணாறு,கொள்ளிடம்,காவிரி
சிவகங்கை வைகையாறு
திருவாரூர் பாமணியாறு,குடமுருட்டி
நாகப்பட்டிணம் வெண்ணாறு,காவிரி
தூத்துக்குடி ஜம்பு நதி,
மணிமுத்தாறு,தமிரபரணி
தேனி வைகையாறு
கோயம்புத்தூர் சிறுவாணி,அமராவதி
திருநெல்வேலிதாமிரபரணி
மதுரை பெரியாறு,வைகையாறு
திண்டுக்கல் பரப்பலாறு,
வரதம்மா நதி,மருதா நதி
கன்னியாகுமரி கோதையாறு,
பறளியாறு,பழையாறு
இராமநாதபுரம் குண்டாறு,வைகை
தருமபுரி தொப்பையாறு,
தென்பெண்ணை,காவிரி
சேலம் வசிட்டா நதி ,காவிரி
விருதுநகர் கெளசிகாறு,வைப்பாறு,குண்டாறு,அர்ஜுனாறு
நாமக்கல் உப்பாறு,நெய்யல்,காவிரி
ஈரோடு பவானி,காவிரி
தமிழக ஆறுகளின் இடையே கட்டப்பட்டுள்ள அணைகளின் விவரங்கள்.
மாவட்டங்கள்ஆறுகள்
தருமபுரிகிருஷ்ணகிரி, தொப்பையாறு, நாகாவதி, பாம்பாறு, கெலவரப்பள்ளி, கேசரளிகுல்லா, பஞ்சப்பள்ளி, வாணியாறு, ஈச்சம்பாடி நீர்த்தேக்கம்.
திருவண்ணாமலைசாத்தனூர் அணை
விழுப்புரம்மணிமுத்தாறு, கோமுகி, வீடூர் நீர்த்தேக்கம்.
சேலம்மேட்டூர் அணை,வசிட்டா நதி அணை
ஈரோடுபவானிசாகர், வரட்டுப்பள்ளம், குண்டேரி பள்ளம், கொடிவேரி, ஓரத்துப் பள்ளம், உப்பாறு
நீலகிரிஅவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்க்கன், குந்தா, சாண்டிநல்லா, பார்சன்ஸ்வேலி,
பைக்காரா, போர்த்திமந்து, மரவகண்டி, முக்குருத்தி, மேல்பவானி நீர்த்தேக்கம்.
கோயம்புத்தூர்அமராவதி,சின்னாறு,பரம்பிக்குளம், ஆளியாறு,திருமூர்த்தி நீர்த்தேக்கம்.
தஞ்சாவூர்கல்லணை
மதுரைவைகை அணை
தேனிமஞ்சளாறு அணை, வைகை அணை
விருதுநகர்பிளவக்கல் அணை
திருநெல்வேலிபாபநாசம், கடனாநதி, இராமா நதி, கருப்பா நதி, சேர்வலாறு, குண்டாறு,
மணிமுத்தாறு அணை
கன்னியாகுமரிபேச்சிப்பாறை அணை
தமிழக சிறப்பம்சங்கள் - தமிழக வனவளம் (Tamilnadu Forests)
காடுகள்
காடுகள் புதுப்பிக்கப்படக் கூடிய ஒரு வளம். நமது வாழ்க்கைக்குத் தேவையான மரம், எரிபொருள், தீவனப்பொருள், தோல் பதனிடத் தேவையானப் பொருட்கள், அரக்கு, பிசின், தாவரஎண்ணெய், முலிகைகள், மருந்துப்பொருட்கள் ஆகியவற்றைக் காடுகள் அளிக்கின்றன. தமிழ்நாட்டின் காடுகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.
அவை;
1.வெப்ப மண்டல ஈரமிக்க பசுமையிலைக்காடுகள்:
1500 மி. மீட்டர்ககும் அதிகமான மழைப்பொழிவு உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயரமான பகுதிகளின் வெப்ப மன்டல ஈரமிக்க பசுமையிலைக் காடுகள் உள்ளன. மரங்கள் உயரமாகவும், அகன்றும் உள்ளன. பெரும்பாலும் கடின மரங்களாக உள்ளன.
2.வெப்ப மண்டல ஈரமான இலையுதிர்க் காடுகள்:
மலைகளின் உயரம் குறைவதாலும் மழைப் பொழிவின் அளவு 1500மில்லி மீட்டர் வரை குறைவதாலும் வெப்ப மண்டல ஈரமிக்க பசுமையிலைக் காடுகள் மெதுவாக வெப்ப மண்டல ஈரமான இலையுதிக் காடுகளாக மாறிவிடுகின்றன.
3.வெப்ப மண்டல வறண்ட இலைடயுதிக் காடுகள்:
மழைப் பொழிவு 1000 மில்லி மீட்டர்முதல் 1500 மில்லி மீட்டர் வரை உள்ள பகுதிகளில் வெப்ப மண்டல வறண்ட இலையுதிர்க் காடுகள் கானப்படுகின்றன. வெப்பமான, வறண்ட காலததில் நீராவிப்போக்கைக் குறைப்பதற்காக மரங்கள் இலைகளை உதிர்த்து விடுகின்றன.
4.முட்புதர்கள், குட்டையான தாவரங்கள்:
நீண்ட வறண்ட காலத்துடன் கூடிய 1000மில்லி மீட்டர்க்கும் குறைவான மழைப்பொழிவுள்ள பகுதிகளில் முட்புதர்களும், குட்டையான தாவரங்களும் உள்ளன.
5.மாங்குரோவ் காடுகள்:
கிழக்குக் கடற்கரையில் குறிப்பாக வேதாரண்யம் மற்றும் பிச்சாவரம் ஆகிய பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள காடுகளின் பரப்பில் சுமார் 60% நீலகிரி மாவட்டத்திலும், சுமார் 20% சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. தர்மபுரி, சேலம், வேலூர் மாவட்டங்களில் சந்தனமரங்கள் முக்கியமாக உள்ளன. கட்டுமான மரங்கள் கோயம்புததூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கிடைக்கின்றன. கன்னியகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்கலும் காணப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கற்பூர தைல மரங்கள் செறிந்துள்ளன. மேற்க்குத் தொடர்ச்சி மலைகளின் கீழ்ச் சரிவுகளில் குறிபபாக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தீக்குச்சி தயாரிப்பதற்கான மரங்கள் வளர்கின்றன. தமிழ்நாட்டில் சுமார் 21,700 சதுர கிலோ மீட்டர் பரப்பில் காடுகள் உள்ளன. இது தமிழ்நாட்டின் மொத்த பரப்பின் சுமார் 18% ஆகும்.
வனவிலங்கு
மலைகளும், காடுகளும் நிறைந்துள்ள தமிழ்நாடு வனவிலங்குகளுக்கு நீண்ட காலமாக பெயர் பெற்றது. யானை, சிங்கம், எருமை, கரடி, மான், குரங்கு, குள்ளநரி, சிறுத்தை போன்ற விலங்குகள் காடுகளில் உள்ளன. வெப்ப மண்டலக் காடுகளில் பலவிதமான பாம்புகள் காணப்படுகின்றன. ஆறுகளில் முதலைகள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், வடமேற்கிலுள்ள மலைப்பகுதிகள் தமிழ்நாடு குன்றுப் பகுதிகள் ஆகியவற்றில் பலவகையான வனவிலங்குகள் உள்ளன. முதுமலை, முண்டந்துறை, ஆனை மலை, வேடந்தாங்கல், கோடிக்கரை முதலிய சரணளயங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுப்பதுடன், நல்ல வருமானத்தையும் பெற்றுத் தருகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள சாரணாலயங்கள்
இடம்பரப்பு(ஹெக்டேர்)வருடம்
முண்டந்துறை (திருநெல்வேலி)56,7361962
கோடிக்கரை (நாகப்பட்டிணம்)1,7261967
களக்காடு (திருநெல்வேலி)22,3581976
வல்லநாடு வெளிமான் (தூத்துக்குடி)1,6411987
மலை அணில் (விருதுநகர்)48,5201988
தமிழ்நாட்டிலுள்ள தேசிய பூங்காக்கள்
இடம்பரப்பு(ஹெக்டேர்)வருடம்
முதுமலை (நீலகிரி)10,3241940
கிண்டி (சென்னை)2821976
மன்னார் வலைகுடா (இராமநாதபுரம்)6231980
இந்திராகாந்தி பூங்கா (கோயம்ப்த்தூர்)11,7111976
முக்குருத்தி (நீலகிரி)7,8461990
தமிழ்நாட்டிலுள்ள பறவைகள் சரணாலயம்
இடம்பரப்பு(ஹெக்டேர்)வருடம்
வேடந்தாங்கல் (காஞ்சிபுரம்)301962
வேட்டங்குடி (சிவகங்கை)381977
கரிக்கிலி (காஞ்சிபுரம்)611989
புலிகாட் ( திருவள்ளூர்)15,3671980
காஞ்சிராங்குளம் (இராமநாதபுரம்)1041989
சித்ராங்குடி (இராமநாதபுரம்)481989
உதய மார்த்தாண்டம் (திருவாரூர்)451991
வடுவூர் (திருவாரூர்)1281991
கூத்தங்குளம் (திருநெல்வேலி)1291994
கரைவெட்டி (பெரம்பலூர்)2801997
வெல்லோடி (ஈரோடு)771997
மேல்செவ்வனூர், கீழ்செவ்வனூர் (இராமநாதபுரம்)5931998
தமிழக சிறப்பம்சங்கள் - தமிழக கோட்டைகள்
எதிரிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற பெரும் மதிற்சுவர்களை தமிழர்கள் கட்டிவைத்தனர் இவை கோட்டைகள் எனப்படும். மேலும் எல்லைப்புறங்களில் காடுகளில் 'படைகள்' தங்குவதற்காக கோட்டைகள் அமைக்கப்பட்டன. அவை படைப்பற்று எனப்படும். இக்கோட்டைகள் செலவுக்காக மக்களிடம் "கோட்டைப் பணம்" என்று வரி வசூலிக்கப்பட்டது.தமிழர் வரலாறு நெடுகிலும் பல 'கோட்டைகள்' முக்கியத்துவம் பெற்றிருந்தன.
தமிழர் கோட்டைகள் 4 வகைப்படும் அவை 1.தரையில் கட்டப்பட்டவை, 2.தண்ணீரால் சூழப்பட்டவை, 3.மலைமீது கட்டப்பட்டவை, 4.காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை
பலதரப்பட்ட கோட்டைகள் தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு இருந்தன அவற்றின் விவரம் பின்வருமாறு,
சங்ககாலக் கோட்டைகள்/ பேரரசுக் கோட்டைகள்:
மதுரை,பூம்புகார்,உறையூர், வஞ்சி, மாவிலங்கை, திருக்கோவலூர், இடங்கில், ஆமூர் கோட்டை, ஏழெயில் (திருமெய்யம்) வியலூர் கோட்டை, தகடூர் அதியமான் கோட்டை, கானப் பேரெயில், காஞ்சிக் கோட்டை, செங்கண்மா, ஓரியூர், சாத்துர், உக்கிரன் கோட்டை, முடிசூடிவைத்தனேந்தல், திருப்பேரெயில், பெரும்பளகுஞ்சி, சத்தியமங்கலம், சாத்துர், செங்கல்பட்டு, பல்லவபுரம், கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை, தஞ்சாவூர், சாக்கோட்டை, நாகப்பட்டினம், விட்டவாசல், குலசேகரன் கோட்டை, களக்காடு, வள்ளியூர், சுந்தரபாண்டியபுரம், பிந்தன்கோட்டை, வீரகேரளம் புதுர், உதகை, பத்மனாபபுரம் கோட்டை, நந்திமலை, கர்நாடககிரி, கரிகேரி, படைவீடு, திருவல்ம், ஆம்பூர், இருங்காட்டுக் கோட்டை, பெண்ணாடகம்.வேலூர், திமிரிக் கோட்டை, தக்கோலம், திருஇடைச்சுரம், நெடுங்கல் கோட்டை, சாலவாக்கம், திருக்கழுக்குன்றம், வீராபுரம் கோட்டை, திருமானர்க்குழி, சேன்தமங்கலம், குறும்பன் கோட்டை, செஞ்சி, வேலூர் வாயில், இராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி, திருவய்யாறு, நீடாமங்கலம், மேலைத்திருக்காட்டுப் பள்ளி, பந்தணை நல்லூர், அறந்தாங்கி, பொன்பற்றி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தம்பிக் கோட்டை, பரக்கலாகி கோட்டை, வல்லிக்கோட்டை, மகாதேவிப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, பொற்பானைக் கோட்டை, கீழநிலை, ஆவூர், நார்த்தா மலை, செந்தலை, ஆத்துர்க் கோட்டை, ராயகோட்டை, தென்கணிக் கோட்டை, கோட்டைமலை, மகிமண்டல துர்க்கம், இளவன் பதி, சிவகாசி, இராமகிரி, கோவில்பட்டி, முதலியார்க் கோட்டை.
சிற்றரசர்களின் கோட்டைகள்:
இரண்யவர்மன் கோட்டை, விளாங்குடி, முள்ளிக்குப்பம், உதச்சிக் கோட்டை, மேலூர், காரமடை
பாளையக் காரர்களின் கோட்டைகள்:
பாஞ்சாலக்குறிச்சி, சிவகிரி, பேருரையூர், போடி நாயக்கனுர், மருதுர், வடகரை, நெய்க்காரப்பட்டி, நெல்கட்டும் செவ்வல், வெங்கலக் குறிச்சிக் கோட்டை, ஆவுடையார்புரம் கோட்டை, வாசுதேவ நல்லூர், பாளயங் கோட்டை, களக்காடு, தலைவன் கோட்டை, திருவில்லிப்புத்துர், திண்டுக்கல், கொல்லங்கொண்டான்.
அய்ரோப்பியர்களின் கோட்டைகள்/ சேதுநாட்டுக் கோட்டைகள்:
ஸ்ரீரங்கப்பட்டணம், சதுரங்கப்பட்டினம், ஓசூர் கோட்டை, பழவேற்காடு, பூந்தமல்லிக் கோட்டை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, தியாக துருக்கம், புதுச்சேரி கோட்டை, வில்லியனுர், அரியாங்குப்பம், செயின்டேவிட் கோட்டை, புவனகிரி, தேவீ கோட்டை, காரைக்கால் கோட்டை, தரங்கம்பாடி, உதயகிரி கோட்டை, தாராபுரம், வட்டக்கோட்டை, குளச்சல் கோட்டை.திப்புசுல்தான் கோட்டை, கோவர் கோட்டை, ஆண்டிக்கரைக் கோட்டை, பொட்டநேரில் கோட்டை, கோட்டையூர், நாமக்கல் கோட்டை, சேலம் கோட்டை, கிருஷ்ணகிரி, சங்ககிரி, கள்ளக்குறிச்சி, ஆரணி, எலவானாசூர்க் கோட்டை, வந்தவாசல் கோட்டை, ஆற்க்காடு, துத்தப்பட்டு, கோவளம் கோட்டை, எழும்பூர், வழுதாவூர்,கருங்குழி, ஆலம்பறைக் கோட்டை, கோட்டக்குப்பம், கிள்ளை, வெள்ளப்பட்டி, இராமநாதபுரம், திருப்புல்லானை, அழகன்குளம், பாம்பன் கோட்டை, சிவகங்கை கவுண்டன் கோட்டை, கமுதி, திருப்பத்துர், சங்கரபுரக் கோட்டை, உறுதிக் கோட்டை, ஓடாநிலைக் கோட்டை, நிலக்கோட்டை, இராஜதானிக் கோட்டை, லிங்கப்ப நாயக்கன் கோட்டை, கைத்தியன் கோட்டை, வேடசந்துர், திருவண்ணாமலை முத்தால் நாயக்கர் துர்கம், வடமதுரைக் கோட்டை, சித்தியன் கோட்டை, வேல்வார் கோட்டை, பிள்ளைக் கோட்டை, நத்தம், தேவ கோட்டை, ஸ்ரீ பாலக் கோட்டை.
இதுவரை தமிழக முதல்வர்கள் :
எண்தமிழக முதல்வர்கள்வருடம்
1அ. சுப்பராயலு ரெட்டியார்1920-21
2பனகல் ராஜா1921-23 : 1923-26
3பி. சுப்பராயன்1926-30
4பி. முனுசாமி நாயுடு1930-32
5பொப்பிலி ராஜா1932-37
6பி. டி. இராசன்1936 ஏப்ரல் - ஆகஸ்ட்
7கே. வி. ரெட்டி நாயுடு1937 ஏப்ரல் - ஜூலை
8சி. இராஜகோபாலாச்சாரியார்1937-39
9டி. பிரகாசம்1946-47
10ஒ.பி. இராமசாம் ரெட்டியார்1947-49
11பி. எஸ். குமாரசாமி ராஜா1949-52
12சி. இராஜகோபாலாச்சாரியார்1952-54
13கு. காமராஜ்1954-57 : 1957-63
14எம். பக்தவச்சலம்1963-67
15சி.என். அண்ணாதுரை
1967-69
16மு. கருணாநிதி1969-71 : 1971-76
17எம்.ஜி. இராமச்சந்திரன்1977-80 : 1980-84 : 1985-87
18திருமதி. ஜானகி இராமச்சந்திரன் 1988 ஜனவரி 7-30
19மு. கருணாநிதி1989-91
20ஜெ. ஜெயலலிதா1991-96
21மு. கருணாநிதி1996-2001
22ஜெ. ஜெயலலிதா14-5-2001 - 21-9-2001
23ஓ. பன்னீர்செல்வம்
21-9-2001 - 24-2-2002
24ஜெ. ஜெயலலிதா2-3-2002 - 2006
25மு. கருணாநிதி2007 -2011
26ஜெ. ஜெயலலிதா2011 முதல் தொடர்கிறார்
இதுவரை தமிழக ஆளுநர்கள் :
எண்தமிழக ஆளுநர்களவருடம்
1வெலிங்டன் பிரபு1919-24
2கோஷன் பிரபு1924-29
3சர். பிரடெரிக் ஸ்டான்லி1929-34
4எர்ஸ்கீன் பிரபு1934-40
5சர். ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ்ஹோப்1940-46
6சர். ஆர்ச்சிபால்ட் எட்வர்ட்நை1946-48
7கிருஷ்ணகுமாரசிங்ஜி பவசிங்ஜி1948-52
8ஸ்ரீபிரகாசா1952-56
9ஏ.ஜெ.ஜான்1956-57
10விஷ்ணுராம் மேதி1958-64
11ஜெயசாம்ராஜ உடையார் பகதூர்1964-66
12சர்தார் உஜ்ஜல்சிங்1966-71
13கே.கே.ஷா1971-76
14மோஹன்லால் சுகாதியா1976-77
15பிரபுதாஸ் பட்வாரி1977-80
16சாதிக் அலி 1980-82
17சுந்தர்லால் குரானா1982-88
18பி.சி.அலெக்சாண்டர்1988-90
19சுர்ஜித்சிங் பர்னாலா1990-91
20பீஷ்ம நாராயண்சிங்1991-93
21டாக்டர். எம். சென்னாரெட்டி1993-96
22கிருஷ்ணகாந்த் (தற்காலிகம்)1996-97
23செல்வி. எம். பாத்திமாபீவி1997-2001
24சி.ரங்கராஜன் (தற்காலிகம்)3-7-2001 - 17-1-2002
25பி.எஸ். ராமமோகன் ராவ்18-1-2002 - 29-10-2004
26எஸ்.எஸ். பர்னாலா3-11-2004 - 2011
27கே.ரோசைய்யா2011 முதல் தொடர்கிறார்
இதுவரை தமிழக சபாநாயகர்கள் :
எண்தமிழக சபாநாயகர்கள்வருடம்
1சிவசண்முகம் பிள்ளை6.5.1952 - 16.8.1955
2என்.கோபால மேனன்27.9.1955 - 1.11.1956
3 டாக்டர் யு.கிருஷ்ணா ராவ்30.4.1957 - 3.8.1961
4 எஸ்.செல்லப்பாண்டியன்31.3.1962 - 14.3.1967
5 சி.பா. ஆதித்தனார்17.3.1967 - 12.8.1968
6புலவர் கே.கோவிந்தன்22.2.1969 - 14.3.1971
7கே.ஏ.மதியழகன்24.3.1971 - 2.12.1972
8புலவர் கே.கோவிந்தன்3.8.1973 - 3.7.1977
9 முனு ஆதி6.7.1977 - 18.6.1980
10 கா.ராசாராம்21.6.1980 - 24.2.1985
11 பி.எச்.பாண்டியன்27.2.1985 - 5.2.1989
12 டாக்டர் மு.தமிழ்க்குடிமகன்8.2.1989 - 30.6.1991
13சேடப்பட்டி ஆர்.முத்தையா3.7.1991-21.5.1996
14 பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்23.5.1996 - 21.5.2001
15 டாக்டர் கா. காளிமுத்து24.5.2001 -1.2.2006
16ஆர்.ஆவுடையப்பன்19.5.2006 - 2011
17டி.ஜெயக்குமார்2011 முதல் தொடர்கிறார்
இதுவரை தமிழக மேலவைத் தலைவர்கள் :
எண் தமிழக மேலவைத் தலைவர்கள் வருடம்
1 டாக்டர். பி. வி. செரியன் 1952-64
2 எம்.ஏ. மாணிக்கவேலு 1964-70
3 சி.பி. சிற்றரசு 1970-76
4 ம.பொ. சிவஞானம் 1976-86
No comments:
Post a Comment