Thursday, 12 September 2013

‘ஜோ’வை இப்பவும் லவ் பண்றேன் - திருமண நாளில் சூர்யா பேச்சு

‘ஜோ’வை இப்பவும் லவ் பண்றேன் - திருமண நாளில் சூர்யா பேச்சு

தன் திருமண நாளில் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா, தனது காதல் மனைவி ஜோ(ஜோதிகா)வை இப்பவும் லவ் செய்து வருவதாக மாணவர்கள் மத்தியில் பேசினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று(செப். 11ம் தேதி) அவருக்கு 7வது திருமண நாள். இந்த நாளை ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவோடு பகிர்ந்து கொண்டார்.

ரமணா ஆர்ட்ஸ் தயாரிப்பில், அன்பு என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘‘இருவர் ஒன்றானால்’’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. படத்தின் ஹீரோ இந்த கல்லூரியின் மாணவர் என்பதால் இங்கேயே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வெளியிட்டு விட்டனர். விழாவில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று படத்தி்ன் பாடல் சி.டி.யை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசுகையில், இப்படத்தின் ஆடியோவை மாணவர்கள் மத்தியில் நடத்தியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இங்கு உங்களை எல்லாம் பார்க்கும்போது என் பழைய கல்லூரி நாள் நினைவுகள் வருகிறது. இன்று(நேற்று செப்.,11ம் தேதி) என்னோட திருமண நாள். நிறையபேர் வாழ்த்து சொன்னாங்க. இருவர் ஒன்றானால் படத்தின் பாடல், படக்காட்சிகள் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்த டீமை எனக்கு முன்னாடியே தெரியும். படத்தின் தயாரிப்பாளர் எனது பல படங்களில் வேலை பார்த்துள்ளார்.

இந்தப்படம் காதல் படமாக உருவாகியுள்ளது. பொதுவாக காதல் என்பது பருவத்தில் ஆரம்பித்து திருமணத்தோடு முடிவது கிடையாது. திருமணம் செய்த பிறகும் காதலிக்கலாம். நான் ஜோதிகாவை காதலித்து 12 வருடங்கள் ஆகிறது. திருமணம் முடித்து 7 வருடங்கள் ஆகிறது. இன்னும் எனது காதல் அப்படியேதான் இருக்கிறது. இப்பவும் ஜோவை தீவிரமாக லவ் பண்ணிட்டு இருக்கேன். திருமணத்துக்கு பிறகு பசங்களுக்கு காதல் குறைஞ்சி போயிடுது என்று பெண்கள் நினைக்கிறார்கள். அப்படி குறைய விடாதீர்கள். எனக்கு கொடுத்த ஆதரவை இவர்களுக்கும் (இருவர் ஒன்றானால் படக்குழுவுக்கும்) கொடுங்கள் என்றார்.

No comments:

Post a Comment