தமிழகத்தில் சர்வாதிகாரம்: சொல்கிறார் விஜயகாந்த்
சென்னை:நாட்டில், எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்ற சர்வாதிகார எண்ணம், தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது, என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:ஒரு கட்சியை துவங்குவது சுலபம்; ஆனால், அதை தொடர்ந்து நடத்துவது கடினம். கடந்த காலங்களில், தே.மு.தி.க., பல சோதனைகளை சந்தித்துள்ளது. இதையெல்லாம் சமாளித்து, இந்த இயக்கத்தை கட்டி காத்து வருகிறோம். ஜனநாயகத்தில், எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை, கிடைக்க வேண்டும்.ஆனால், நாட்டில் எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற சர்வாதிகார எண்ணம், தமிழகத்தில் தலை விரித்தாடுகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம், ஒழுங்கு சீர்கேடு, மின் பற்றாக்குறை என, பல்வேறு கஷ்டங்களுக்கு, மக்கள் ஆளாகி வருகின்றனர்.
இவை போதாது என்று, அடிக்கடி, பெட்ரோலிய பொருட்களின் விலையை, மத்திய அரசு உயர்த்தி வருகிறது. எதிர்க்கட்சி என்ற முறையில், மக்கள் பிரச்னைகளுக்காக, தே.மு.தி.க., குரல் கொடுக்கிறது. வரும், 14ம் தேதி, தே.மு.தி.க., ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.இந்த ஆண்டு விழாவை,இனிப்புகள் வழங்கியும் பொதுக் கூட்டங்கள் நடத்தியும், கட்சி கொள்கைகளை மக்களுக்கு விளக்க வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment