தனுஷுக்கு ஜோடியாக இந்தி நடிகை
ராஞ்சனாவுக்கு பின், மீண்டும், இந்தி படத்தில் நடிக்கப் போவதாக கூறிய தனுஷ், அதையடுத்து, தமிழில், நய்யாண்டி, வேங்கைச்சாமி, வேலையில்லா பட்டதாரி, அனேகன் என, படங்கள் புக்காகி விட்டதால், இந்தியில் நடிப்பதை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார். நய்யாண்டி படப்பிடிப்பு முடிந்து விட்டதால், கே.வி.ஆனந்த் இயக்கும், அனேகன் படப்பிடிப்பில், தற்போது நடித்து வருகிறார் தனுஷ். காதல், காமெடிஆக் ஷன் கலந்த கதையில் தயாராகும் இப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதற்கு,பிரஷ்சான நடிகையை தேடி வந்தார், இயக்குனர்.ஆனால்,யாரும்செட்டாக வில்லை. இதையடுத்து, இஷாக் என்ற இந்தி படத்தை, யதார்த்தமாக பார்த்த அவருக்கு, அந்த படத்தில் நடித்த,அமீரா என்ற நடிகையின் நடிப்பு, பிடித்து போய் விட்டது. அவரைப் பற்றி, தனுஷிடம் கூறவே, அவரும்,டபுள் ஓ.கே.,சொல்லி விட்டாராம். உடனடியாக, அமீராவுக்கு அட்வான்ஸ் கொடுத்து,புக் செய்து விட்டனர்.
No comments:
Post a Comment