புதிய 10 ரூபாய் நாணயம்
சென்னை: வைஷ்ணவி தேவி தேவஸ்தானத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, 10 ரூபாய் நாணயங்களை, ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இது குறித்து, ரிசர்வ் வங்கி பொது மேலாளர் நீதிராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஷ்மீர் மாநிலத்தில், கட்ரா பகுதியில் உள்ள, மாதா வைஷ்ணவி தேவி தேவஸ்தானத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, 10 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. நாணயத்தின் ஒரு பக்கம், மாதா வைஷ்ணவி தேவியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு, வெள்ளி விழா ஆண்டு என குறிப்பிட்டிருக்கும். நாணயம், 27 மி.மீட்டர் விட்டத்தில், அலுமினிய வெண்கலம் மற்றும் செம்பு நிக்கல் கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, நீதிராகவன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment