Thursday, 5 September 2013

அசத்துவேன்... முன்னேறுவேன்...:இவானோவிச்

அசத்துவேன்... முன்னேறுவேன்...:இவானோவிச்

""டென்னிஸ் அரங்கில் 14வது இடத்தில் இருந்தாலும், மீண்டும் போட்டிகளில் அசத்தி முன்னேற்றம் அடையவே விரும்புகிறேன், என, இவானோவிச் தெரிவித்தார்.
செர்பியாவின் அழகு டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச், 25. இதுவரை ஒருமுறை மட்டும் கிராண்ட்ஸ்லாம் (பிரெஞ்ச் ஓபன், 2008) பட்டம் வென்றார். சர்வதேச தரவரிசையில் "நம்பர்-14 இடத்திலுள்ள இவர், தற்போதைய யு.எஸ்., ஓபன் தொடரில் சாதிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
இவானோவிச் அளித்த பேட்டி:
* யு.எஸ்., ஓபனை வெற்றிகரமாக துவக்கியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
முதல் போட்டி என்பதால் சற்று நெருக்கடி இருந்தது. சரியான "ரிதத்தை கண்டறிந்த பின், எளிதாக வெற்றி பெற்றேன்.
* டென்னிஸ் உலகில் மீண்டும் முன்னணி இடத்துக்கு வரும் எண்ணம் உள்ளதா?
இது தான் எனது ஒரே குறிக்கோள். இதற்கான தகுதிகள் எனக்குள்ளதாக நம்புகிறேன். ஒருமுறை "நம்பர்-1 இடத்தில் இருந்துவிட்டால், அப்புறம் மற்ற இடங்களில் இருப்பது திருப்தி தராது. இதனால், முடிந்த வரை எனது திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி முன்னேற்றம் அடையவே முயற்சித்து வருகிறேன்.
* உங்களது புதிய கூட்டணி எப்படி உள்ளது?
விம்பிள்டன் தொடருக்குப் பின், உடற்தகுதி பயிற்சியாளர் உட்பட பலரும் புதியதாக வந்துள்ளனர். இதனால், உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறேன். செர்பியாவை சேர்ந்தவர்களுடன் இணைவது இது தான் முதன் முறை. யு.எஸ்., ஓபன் தொடருக்காக, 10 நாட்கள் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
* இத்தொடருக்காக "ஸ்பெஷலாக தயாராகி உள்ளீர்களா?
அப்படியெல்லாம் கிடையாது. எனது திறமையை மேம்படுத்த பல்வேறு பிரிவுகள் உள்ளன. முதலில் சர்வீஸ் செய்வது, பந்தை திருப்பி அனுப்புவதில் நல்ல முன்னேற்றம் அடைய பயிற்சி செய்தேன். போட்டிகளில் வெற்றி பெற இதுதான் முக்கியம்.
* சமீபத்தில் "டுவிட்டரில் இணைந்த நீங்கள், ஜோகோவிச், நடாலிடம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டீர்களா?
ஜோகோவிச், நடால் என, இருவரும் "டுவிட்டரில் மிகவும் பிரபலம். இவர்களுடன் பேசும் வாய்ப்பு இதுவரை வரவில்லை. விரைவில், இது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

No comments:

Post a Comment