தமன்னாவுக்கு ஏமாற்றம்
பாலிவுட்டை கெட்டியாக பிடித்துவிட வேண்டும் என்று தமன்னா நினைத்தாலும், அவருக்கான பட வாய்ப்புகளை, சில நடிகைகள் தட்டிப்பறித்து விடுவதால், அங்கு தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதனால், தற்போது அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும், வீரம் படத்திற்கு பின், அனுஷ்கா, நயன்தாரா நடிப்பது போன்று, டைட்டில் வேடங்களில் நடித்து, தனக்கென, ஒரு தனி டிராக்கை உருவாக்க திட்டமிட்டார். ஆனால், தமன்னாவை நம்பி, டைட்டில் வேடங்களை கொடுக்க டைரக்டர்கள் தயங்குகிறார்களாம். இதனால், மனதளவில் ஏமாற்றமடைந்துள்ள தமன்னா, வழக்கம்போல் முன்னணி ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி, கிளாமர் பிரவேசத்தை தொடரும் முடிவில் உள்ளார். சினிமாவில் நீடிக்க கிளாமர் மட்டுமே போதாது என்பதால், காமெடி கலந்த வேடங்களாக தேடிப்பிடித்து நடிக்கத் துவங்கியுள்ளார் தமன்னா.
No comments:
Post a Comment